சிறப்புக் கட்டுரைகள்

திருமண நாளில் அழகுடன் ஜொலிக்க.. + "||" + To shine beautifully on the wedding day ..

திருமண நாளில் அழகுடன் ஜொலிக்க..

திருமண நாளில் அழகுடன் ஜொலிக்க..
திருமண கோலத்தில் பளிச்சென்ற முகத்தோற்றத்துடன் அழகாக மிளிர வேண்டும் என்பதுதான் மணமகளின் விருப்பமாக அமைந்திருக்கும். திருமண நாள் நெருங்க தொடங்கியதும் பலர் அழகு சாதன பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கி விடுவார்கள். அவை பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்படுத்தாதவை களாக அமைந்திருக்க வேண்டும்.
சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு ஏதுவாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் உலர் சருமம்தான் மணப்பெண் அனுபவிக்கும் முக்கிய பிரச் சினைகளுள் ஒன்றாகும். சருமம் உலர்ந்தும், பொலிவிழந்தும் இருந்தால் அதில் படிந்திருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் சேர்க்கப்பட்ட அழகு சாதன பொருட்கள் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். மென்மையான தோற்றத்தை தக்கவைப்பதற்கும், அழகை பேணுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதேபோல் திருமண நாள் நெருங்கும் வேளையில் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.

திருமண சமயத்தில் மணப்பெண்ணை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினையாக முகப்பரு அமையும். அதனை தவிர்க்க வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ சத்துக்கள் உள்ளடங்கியிருக்கும் மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்ய வேண்டும். அவை முகப்பருவை கட்டுப் படுத்தும் தன்மை கொண்டவை. அதேபோல் எண்ணெய் தன்மை இல்லாத மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்வதும் முகப்பருவுக்கு நிவாரணம் தரும்.

ஒருவேளை முகப்பரு பிரச்சினையை எதிர்கொண்டால் அதனை போக்கும் தன்மை கொண்ட பேஸ் மாஸ்க், பேஸ் கிரீம் போன்றவற்றை தக்க சமயத்தில் பயன்படுத்த வேண்டும். முகப்பரு அதிகம் தென்பட்டால் தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுவதும் சரும அழகை கெடுத்துவிடும். மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை கரு வளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந் திருக்கின்றன. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளடங்கி இருக்கும் கிரீம்கள் கருவளையங்களை கட்டுப்படுத்துவதற்கு உதவும். அவை எதிர்பார்த்த பலனை தராவிட்டால் கவலைப்பட வேண்டாம். இயற்கை மூலிகை பொருட்களை உபயோகிப்பது நிரந்தர தீர்வை கொடுக்கும்.

கருவளையம் போல், கண்கள் வீங்கும் பிரச்சினையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். கண்களில் ஏற்படும் அழுத்தம், ஒவ்வாமை, தூக்க குறைபாடு காரணமாக இந்த பிரச்சினை எழலாம். வைட்டமின் சி அல்லது ஆன்டி ஆக்சிடென்ட் கொண்ட கிரீம்கள் வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க துணைபுரியும்.

சருமத்திற்கு நிரந்தர அழகை கொடுக்கும் தன்மை இயற்கை மூலிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுக்கு உண்டு. அவற்றை பயன்படுத்தி பேஸ் பேக் தயாரித்து சரும அழகை பிரகாசிக்க செய்யலாம். திருமணத்துக்கான ஒப் பனைக்கு தயாராகும் முன் சரும நிபுணரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.