டபிள்யூ.டி. பர்ப்பிள் புரோ நினைவகம்


டபிள்யூ.டி. பர்ப்பிள் புரோ நினைவகம்
x
தினத்தந்தி 26 Aug 2021 3:27 PM GMT (Updated: 26 Aug 2021 3:27 PM GMT)

வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் அதிக நினைவகத்திறன் கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. டபிள்யு.டி. பர்ப்பிள் புரோ என்ற பெயரில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 டி.பி. முதல் 18 டி.பி. வரையிலான நினைவகத்திறன் கொண்டவை.

செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட நெட்வொர்க் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய வசதியாக அதிக நினைவகத் திறன் கொண்டவையாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பயன்படுத்தும் சாதனத்தின் நினைவகத் திறனை அதிகரிக்க இது பெரிதும் உதவும். ஒரே சமயத்தில் 64 ஹெச்.டி. கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இதில் சேமிக்க முடியும். அதேபோல ஒரே சமயத்தில் 32 ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளை இதன் மூலம் செயல்படுத்த முடியும். 4 டி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.8,999. இதில் 8 டி.பி. நினைவக மாடலின் விலை சுமார் ரூ.25,999.

Next Story