சிறப்புக் கட்டுரைகள்

விநோதமான ஊரும், பெயரும்..! + "||" + Strange town and name ..!

விநோதமான ஊரும், பெயரும்..!

விநோதமான ஊரும், பெயரும்..!
சாம்சங், சிம் கார்டு, ஆண்ட்ராய்டு, ஜியோனி, சிப்..... இவை நம்மை பொறுத்தவரை மொபைல் தொடர்புடைய வார்த்தைகள். ஆனால் ராஜஸ்தானில் உள்ள கிராமத்தில் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகளைத் தான் பெயராக சூட்டுகிறார்கள்.
ராஜஸ்தானில் புந்தி என்னும் நகருக்கு அருகே ராம்நகர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காஞ்சர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் மக்கள் தொகை 500 தான். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் பலர் படிக்கவில்லை. எனவே தங்கள் பிள்ளைகளின் பெயர்கள் அவர்களைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதற்காக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், பிரதமர் என்னும் பெயர்களை சூட்டுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் 50 வயது பெண்ணுக்கு அவர்களின் மாவட்ட கலெக்டர் மீது மரியாதை என்பதால், அவரின் பேரனுக்கு ‘கலெக்டர்’ என்று பெயர் சூட்டி உள்ளார். இங்கு கொள்ளை, திருட்டு அதிகம். கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான ஆண்கள் மீது திருட்டு வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. தங்கள் பிள்ளைகள் அவ்வாறு வளரக் கூடாது என்பதால் அவர்களுக்கு ‘ஐ.ஜி’, ‘எஸ்.பி.’, ‘நீதிபதி’ என்றும் பெயர் சூட்டி உள்ளனர்.

தற்போது தொழிநுட்ப ரீதியாக அப்டேட் ஆகியுள்ள கிராம மக்கள் ஆண்ட்ராய்டு, சாம்சங், நோக்கியா, ஜியோனி, சிம் கார்டு, சிப் என்று பெயர் வைக்க தொடங்கிவிட்டனர்!