டாடா ‘எக்ஸ்பிரஸ்-டி’


டாடா ‘எக்ஸ்பிரஸ்-டி’
x
தினத்தந்தி 22 Sep 2021 11:21 AM GMT (Updated: 22 Sep 2021 11:21 AM GMT)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரியில் ஓடும் புதிய மாடல் செடான் காரை ‘எக்ஸ்பிரஸ்-டி’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா சன்ஸின் அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரியில் ஓடும் புதிய மாடல் செடான் காரை ‘எக்ஸ்பிரஸ்-டி’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. வாடகைக் கார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் குழுமங்களை இலக்காகக் கொண்டு சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி காராக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவாக சார்ஜ் ஆவது, அதிக கிலோமீட்டர் தூரம் ஓடுவது ஆகியன இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். இதனால் எரிபொருள் செலவு கிடையாது. பராமரிப்பு செலவும் குறைவு. வாடகைக்கார் நிறுவனங்களுக்கு இது லாபகரமான முதலீடாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் அதிக திறன் கொண்ட 21.5 கிலோவாட் மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 213 கி.மீ. தூரம் ஓடும். மற்றொரு மாடல் 16.5 கிலோவாட் திறன் கொண்டது. சோதனை ஓட்டத்தில் இது 165 கி.மீ. தூரம் சென்றதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.பி.டி. ஆகிய வசதிகளைக் கொண்டு உள்ளது. இதன் பேட்டரி 90 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். இதை சாதாரண 15 ஆம்பியர் மின்சார சார்ஜிங் பாயிண்டில் சார்ஜ் செய்ய முடியும்.

Next Story