ஏக்யூபிட் ஸ்மார்ட் கடிகாரம்


ஏக்யூபிட் ஸ்மார்ட் கடிகாரம்
x
தினத்தந்தி 29 Sep 2021 3:23 PM GMT (Updated: 29 Sep 2021 3:23 PM GMT)

நொய்டாவைச் சேர்ந்த ஏக்யூபிட் நிறுவனம் ‘டபிள்யூ 5 எட்ஜ்’ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த ஏக்யூபிட் நிறுவனம் ‘டபிள்யூ 5 எட்ஜ்’ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.7 அங்குல திரையைக் கொண்டது. இதய துடிப்பு, தூக்க செயல்பாடு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட வற்றைத் துல்லியமாகக் கணக்கிடும். நீர் புகா தன்மை கொண்டது.

பாட்மின்டன், நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, கூடைப்பந்து விளையாடுவது, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுவது, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு களில் ஈடுபடும்போது உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை அது துல்லியமாகக் கணக்கிடும். புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது.

ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளம் மற்றும் ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போனுடன் இதனை இணைத்து செயல்படுத்த முடியும்.

இதில் 180 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 நாட்கள் வரை செயல்படும். கருப்பு, கிரே, பச்சை வண்ணங்களில் வந்துள்ள இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.2,499.

Next Story