சிறப்புக் கட்டுரைகள்

ஜூக் ஸ்பீக்கர் பிளாஸ்டர் சீரிஸ் + "||" + Juke Speaker Blaster Series

ஜூக் ஸ்பீக்கர் பிளாஸ்டர் சீரிஸ்

ஜூக் ஸ்பீக்கர் பிளாஸ்டர் சீரிஸ்
பிரான்ஸைச் சேர்ந்த ஜூக் நிறுவனம் பிளாஸ்டர் சீரிஸில் புதிதாக ஸ்பீக்கர்கள் மற்றும் டேப்லெட், மொபைல் வைப்பதற்கான இட வசதி, ஆர்.ஜி.பி. விளக்கு, கரோக் மைக்ரோபோன் போன்ற அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த ஜூக் நிறுவனம் பிளாஸ்டர் சீரிஸில் புதிதாக ஸ்பீக்கர்கள் மற்றும் டேப்லெட், மொபைல் வைப்பதற்கான இட வசதி, ஆர்.ஜி.பி. விளக்கு, கரோக் மைக்ரோபோன் போன்ற அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒரு ஸ்பீக்கர், இரண்டு ஸ்பீக்கர்களைக் கொண்டதாக மூன்று மாடல்களில் (மினி பிளாஸ்டர், மியூசிக் பிளாஸ்டர், டுவின் பிளாஸ்டர்) இது அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,299, ரூ.1,599 மற்றும் ரூ.1,899 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி மூலம் செயல்படும் இந்த ஸ்பீக்கரின் எடை 550 கிராம்.


இதில் 10 வாட் ஸ்பீக்கர் உள்ளன. 1,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். 10 மீட்டர் சுற்றளவில் எந்த மின்னணு சாதனத்துடனும் வயர்லெஸ் முறையில் இதை இணைத்து செயல்படுத்த முடியும்.