வியூசோனிக் எலைட் கேமிங் மானிட்டர்


வியூசோனிக் எலைட் கேமிங் மானிட்டர்
x
தினத்தந்தி 7 Dec 2021 3:33 PM GMT (Updated: 7 Dec 2021 3:33 PM GMT)

வியூசோனிக் நிறுவனம் எலைட் எக்ஸ்.ஜி.270 கியூ என்ற பெயரிலான மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 27 அங்குல கிவாட் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்பிளே உள்ளது. ஹெட்போனை மாட்டுவதற்கு வசதியாக ஹூக்கும் உள்ளது. 178 டிகிரி கோணத்தில் இதை செங்குத்தாகவோ அல்லது கிடை நிலையிலோ சாய்க்க முடியும்.

இதன் விலை சுமார் ரூ.50,999. இதில் ஹெச்.டி. எம்.ஐ 2 போர்ட்கள் உள்ளன. யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட் மற்றும் யு.எஸ்.பி. டைப் பி போர்ட் உள்ளன.

Next Story