டொயோடா ஹிலுக்ஸ்


டொயோடா ஹிலுக்ஸ்
x
தினத்தந்தி 26 Jan 2022 12:39 PM GMT (Updated: 26 Jan 2022 12:39 PM GMT)

டொயோடா நிறுவனம் பிக்-அப் மாடலில் சர்வதேச அளவில் பிரபலமான ஹிலுக்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

இதற்கான முன்பதிவை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபல மாடல்களான இனோவா, பார்ச்சூனர் ஆகியவை தயாரிக்கப் படும் பிளாட்பார்மில் இது தயாரிக்கப்படுகிறது. 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது.

இதன் நீளம் 5,285 மி.மீ. இது 204 ஹெச்.பி. திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். நான்கு சக்கர சுழற்சி கொண்டது. பார்ச்சூனர் முகப்பு தோற்றத்தைப் போன்று இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இருப்பினும் இதன் முன்புறத்தில் ஹெக்சகன் வடிவிலான கிரில் உள்ளது. எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் உறுதியான பம்பர் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் பின்பகுதி வழக்கமான பிக்-அப் டிரக் போன்ற தோற்றத்தில் உள்ளது.

இதில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போ டெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளது. இரண்டு வரிசை இருக்கைகளைக் கொண்டது. பின்புறத்தில் அமர்ந்திருப்போர் சவுகரியமாக கால் நீட்டிக்கொள்ளும் வகையில் இட வசதி உள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள இஸுசு பிக்-அப் டிரக் மாடலுக்கு இது போட்டியாக இருக்கும்.

Next Story