சாம்சங் கேலக்ஸி ஏ 8 டேப்லெட்


சாம்சங் கேலக்ஸி ஏ 8 டேப்லெட்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:26 AM GMT (Updated: 27 Jan 2022 6:26 AM GMT)

கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சீரிஸில் புதிதாக ஏ 8 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

அழகிய வடிவமைப்பு, பெரிய அளவிலான திரை, நீண்ட நேரம் செயல்படும் வகையிலான பேட்டரி, சிறப்பான இசையை வழங்கும் ஆடியோ சிஸ்டம் ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.

இதில் ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. 7040 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 15 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.17,999. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.19,999. இதில் எல்.டி.இ. மாடல் விலை சுமார் ரூ.21,999.


Next Story