சிறப்புக் கட்டுரைகள்

சித்திரையின் முத்திரை + "||" + The impression of the Tamil New year month

சித்திரையின் முத்திரை

சித்திரையின் முத்திரை
தமிழ் மாதங்களில் முத்திரை பதிப்பது, சித்திரை. இறைவழிபாடு, பண்பாடு, கலாசாரம், விருந்தோம்பல், ஆசிபெறுதல் போன்று மனித வாழ்க்கைக்கு மிக முக்கிய மான நிகழ்வுகள் எல்லாம் சித்திரை முதல் நாளில் நடக்கிறது. அதனால்தான் சித்தி ரையை ஒரு முத்திரை மாதம் என்கிறோம்.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனிற்காலம் என்னும் வசந்தகாலம் தொடங்குகிறது. சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாசற்படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு மாவிலை தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாசற்படிகளில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை யாகும்.

அதோடு, மஞ்சள், குங்குமம், ஆகியவை நோய்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்த நடைமுறை வழக்கத்துக்கு வந்தது. சித்திரை புத்தாண்டு நாளில் நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியவை இட்டு பூஜையில் வைத்து வழிபட வேண்டும். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சமாக பிரகாசிப்பதால், அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்பு வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.