சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: கேனன் மிரர்லெஸ் கேமரா + "||" + Vanavil : Canon Mirrorless Camera

வானவில்: கேனன் மிரர்லெஸ் கேமரா

வானவில்: கேனன் மிரர்லெஸ் கேமரா
கேமராக்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜப்பானைச் சேர்ந்த கேனன் நிறுவனம் மிரர்லெஸ் கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.
 ‘இ.ஓ.எஸ். எம்200’ என்ற பெயரில் வந்துள்ள இந்த கேமராவின் விலை சுமார் ரூ.43,995. இது 24.1 மெகாபிக்ஸெல் திறன் கொண்டது. இதில் சி.எம்.ஓ.எஸ். சென்சார் மற்றும் டிஜிக் 8 இமேஜிங் பிராசஸர் உள்ளது. இதில் ஐ.டி.டெக் ஆட்டோபோகஸ் வசதி உள்ளது.

24 எப்.பி.எஸ். வேகத்தில் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்ய முடியும். இவை அனைத்தையும் 4-கே ரெசல்யூஷனில் பதிவு செய்யலாம். இதில் எல்.பி.இ12 லித்தியம் அயன் பேட்டரி உள்ளதால் இதன் மூலம் 90 நிமிடம் படக் காட்சிகளையும் புகைப்படம் எடுப்பதாயிருந்தால் 315 படங்கள் வரையிலும் எடுக்க முடியும். இதில் உள்ள எல்.சி.டி. தொடு திரை 180 டிகிரி கோணம் வரை திரும்பும் வசதி கொண்டது.

இதை புளூடூத் மூலம் இணைக்க முடிவதால் காட்சிகளை உடனுக்குடன் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர முடியும். இதில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் கேமராவை ஸ்மார்ட்போன் மூலமே செயல்படுத்த முடியும். இதனால் வெகு தூரத்திலிருந்தும் கேமராவில் வீடியோ அல்லது புகைப்படங்களை எடுப்பது சாத்தியமாகியுள்ளது.