சிறப்புக் கட்டுரைகள்

மூன்றாவது காலாண்டில்அசோக் லேலண்டு லாபம் 87% சரிவு + "||" + In the third quarter Ashok Leyland profits decline 87%

மூன்றாவது காலாண்டில்அசோக் லேலண்டு லாபம் 87% சரிவு

மூன்றாவது காலாண்டில்அசோக் லேலண்டு லாபம் 87% சரிவு
மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது அசோக் லேலண்டு நிறுவனப் பங்கு ரூ.77.35-க்கு கைமாறியது.
மும்பை

அசோக் லேலண்டு நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.57 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.429 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 87 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் (ரூ.7,490 கோடியில் இருந்து) ரூ.5,189 கோடியாக குறைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது அசோக் லேலண்டு நிறுவனப் பங்கு ரூ.77.35-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.82.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ.77.35-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு ரூ.81.55-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.25 சதவீத ஏற்றமாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு