சிறப்புக் கட்டுரைகள்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 எம்50.டி. டார்க் ஷாடோ எடிஷன் + "||" + BMW X7 M50.D. Dark Shadow Edition

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 எம்50.டி. டார்க் ஷாடோ எடிஷன்

பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 7 எம்50.டி. டார்க் ஷாடோ எடிஷன்
சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது டார்க் ஷாடோ எடிஷன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. மொத்தமே 500 கார்களை லிமிடெட் எடிஷனாக இந்நிறுவனம் தயாரிக்கிறது.
எக்ஸ் ரேஞ்ச் பிரிவில் இதன் மேல்பாகம் மற்ற எந்த மாடலிலும் இல்லாத ஒன்றாகும். உயர் தரத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லேசர் லைட் மிக உயரிய தரத்தை ஏற்படுத்தியுள்ளது. 22 அங்குல எம் லைட் அலாய் சக்கரம் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. 6 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் அனைத்தும் எலெக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இருக்கைகளில் போதிய காற்றோட்ட வசதி இருப்பதால் நீண்ட நேரம் பயணித்தாலும் பயண களைப்பு ஏற்படாது. ஸ்டீயரிங் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மிகவும் மிருதுவான தோல் உறை கைகளுக்கு மென்மையான ஓட்டும் அனுபவத்தை அளிக்கிறது. திறந்து மூடும் வகையிலான மேற்கூரை உள்ளது. காரின் உள்பகுதியில் ஐந்து நிலையில் குளிர் நிலவும் வகையிலான அட்ஜெஸ்ட்மென்ட் வசதி கொண்டது.

இதில் 2993 சி.சி. திறன் கொண்ட 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் உள்ளது. இது 400 ஹெச்.பி. திறனையும், 760 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை யும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்த 5.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும். இதில் 8 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. பார்க்கிங் அசிஸ்டென்ட் பிளஸ் மற்றும் சரவுண்ட் கேமரா, ரிவர்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. டைனமிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் ஆட்டோ ஹோல்ட் வசதியுடன் உள்ளது. குழந்தை இருக்கை, கண்காணிப்பு வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.2.02 கோடி.