வெற்றிக்கு சில வார்த்தைகள்


வெற்றிக்கு சில வார்த்தைகள்
x
தினத்தந்தி 6 Dec 2021 3:28 PM GMT (Updated: 2021-12-06T20:58:55+05:30)

யார் கடுமையான உழைப்பை விதைக்கிறார்களோ, அவர்களே வெற்றியையும் அறுவடை செய்வார்கள்.

* எந்த ஒரு காலகட்டத்திலும் பொறுமை என்பது தோற்றது இல்லை. பொறாமை என்பது வெற்றி கண்டதும் இல்லை. எனவே பொறாமையை விடுத்து, பொறுமையை கையாளுங்கள்.

* ஒருவரிடம் நீங்கள் பெற்ற உதவிக்கு, நன்றி மறக்காமல் இருக்க வேண்டும். அதே போல் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தீர்கள் என்பதற்காக அவரிடம் நன்றியை எதிர்பார்ப்பது சரியல்ல.

* உங்களை நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒருபோதும் மற்றவரை காயப்படுத்தி விடக் கூடாது.

* நண்பர்களுக்குள் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, சந்தேகத்தை எரித்துவிடுவது, மற்றொன்று நம்பிக்கையை விதைத்து விடுவது.

* வாழ்க்கையில் எப்போதும் நேர்மறை எண்ணம் மிக முக்கியம். நீங்கள் அடையும் வெற்றி அனைத்தும் இறைவன் உங்களுக்கு கொடுத்த பரிசு. அதே போல் நீங்கள் அடையும் தோல்வி, மற்றொருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு என்று கருதுங்கள்.

* நம்பிக்கையை இழந்தவன், வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். அதுபோல நம்பிக்கையோடு இருப்பவனை, வீழ்த்துவதும் மிகவும் கடினம்.

* யார் கடுமையான உழைப்பை விதைக்கிறார்களோ, அவர்களே வெற்றியையும் அறுவடை செய்வார்கள்.


Next Story