70 மணிநேர மலையேற்றம்


70 மணிநேர மலையேற்றம்
x

லடாக்கில் இரண்டு உயரமான மலைகளை 70 மணி நேரத்தில் இந்திய மலையேற்ற வீரர்கள் அடைந்துள்ளனர். சென்னையை சேர்ந்த நவீன் தலைமையில் புனே, ஐதராபாத், மும்பை மற்றும் அரியானாவில் இருந்து மலையேற்ற வீரர்கள் இந்த சாகச பயணத்தில் பங்கேற்றனர்.

தங்களின் திறமையையும், சகிப்புத்தன்மையையும் பயன்படுத்தி 5 வீரர்களும் லடாக்கில் 6 ஆயிரத்து 250 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் காங்யாட்சே மற்றும் 6 ஆயிரத்து 240 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் டிசோ டிசோங்கோ ஆகிய இரு மலைகளின் உச்சியையும் 70 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 17-ந் தேதி மலையேற்றத்தைத் தொடங்கிய இந்தக் குழுவினர், 22-ந் தேதி உச்சியைத் தொட்டுவிட்டு திரும்பினர்.

இது குறித்து நவீன் கூறுகையில், "இந்தப் பயணத்தை போட்டியின்றி, நட்புடன் குழுவாக தொடர்ந்தோம். சாதனைக்காக இந்த முயற்சியை நாங்கள் செய்யவில்லை. எங்கள் திறமையையும் உடல் திறனையும் சோதிக்க முயன்றோம்.

மலையேற்றத்தைப் பொழுதுபோக்காகவோ அல்லது விளையாட்டாகவோ பலர் எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது உடல்-மனம் சம்பந்தப்பட்டது. இரண்டுக்கும் புத்துயிர் ஊட்டக்கூடியது. கயிறுகள் மற்றும் பனிக்கட்டிகள் வழியே எங்கள் மலையேற்றம் இருந்தது" என்றார்.


Next Story