பென்கியூ கம்ப்யூட்டர் மானிட்டர்


பென்கியூ கம்ப்யூட்டர் மானிட்டர்
x

பென்கியூ நிறுவனம் புதிதாக 27 அங்குலம் மற்றும் 32 அங்குல அளவுகளில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

கிராபிக் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் நிபுணர்களுக்கு இது ஏற்றது. இதில் வண்ணக்காட்சிகள் துல்லியமாகத் தெரியும். இவை இரண்டுமே பன்முக கலர் டிஸ்பிளே தேர்வு வசதி கொண்டவை. அத்துடன் படத்தினுள் படம் (பிக்சர் இன் பிக்சர்) மற்றும் படங்களை அடுத்து படம் (பிக்சர் பை பிக்சர்) என்ற வசதிகளைக் கொண்டது.

கேட், கேம் மற்றும் அனிமேஷன் உள்ளிட்ட வற்றுக்கேற்ப தேர்வு செய்யும் வசதி கொண்டது. இதில் ஹெச்.டி.எம்.ஐ. 2.0 போர்ட், டி.பி. 1.4 மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் இணைப்பு வசதி கொண்டது. இதனால் பர்சனல் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட வற்றுடன் இணைக்க முடியும். 27 அங்குல மாடல் விலை சுமார் ரூ.49,990. 32 அங்குல மாடல் விலை சுமார் ரூ.64,990.


Next Story