சிறுவன் அத்வைத் கோலார்கர் 'கலை கண்காட்சி'


சிறுவன் அத்வைத் கோலார்கர் கலை கண்காட்சி
x

லண்டனில் உள்ள புகழ்பெற்ற காக்லியார்டி கேலரியில் தனது கலைப் படைப்பை தனித்துவமாக காட்சிப்படுத்தி அசத்தி இருக்கிறார்,

அத்வைத் கோலார்கர். 7 வயதாகும் இந்த சிறுவன் எட்டு மாத குழந்தையாக இருந்தபோது வண்ண நிறங்களை கொண்டு விளையாட தொடங்கி இருக் கிறார்.

நாளடைவில் வண்ணங்கள் மீதும், ஓவிய கலை மீதும் ஆர்வம் ஏற்பட தொடங்கி இருக்கிறது. விளையாட்டு மன நிலையிலேயே வண்ணம் தீட்ட பழகி இருக்கிறார். அதுவே அவரது ஓவிய திறனை மெருகேற்றிக்கொள்வதற்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. அத்வைத்தின் திறமையை கண்டறிந்த அவரது பெற்றோர் விதவிதமான வண்ணங்களை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினர்.

''எங்கள் வீட்டின் சுவர்களில் திரும்பிய பக்கமெல்லாம் அத்வைத்தின் கலைப்படைப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவனது கற்பனையில் உதிக்கும் விஷயங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் இடமாக வீட்டு சுவர் அமைந்தது. அத்வைத்தின் கலைப் படைப்புகளெல்லாம் ஏதாவதொரு கதையை சொல்லும். கூர்ந்து கவனித்தால் அதன் உள்ளுணர்வு புரியும். அவனுடைய கற்பனையின் வெளிப்பாட்டை உணர்வுப்பூர்வமாக உணரலாம். ஒரு அழகான உலகத்துக்குள் நுழைந்த உணர்வை கொடுக்கும். லண்டன் கண்காட்சி திருப்புமுனை பயணமாக அமையும்'' என்கிறார்கள் அத்வைத்தின் பெற்றோரான அமித் கோலார்கர்-ஸ்ருதி கோலார்கர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அத்வைத் 2020-ம் ஆண்டு தனது கலைப்படைப்புகளுக்காக குளோபல் சைல்ட் ப்ராடிஜி விருதை பெற்றார். லண்டன் கண்காட்சிக்கு பிறகு நியூயார்க், லாஸ் வேகாஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தனது கலை படைப்புகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளார்.


Next Story