கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை ; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை ;  அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
x

கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி, மே.28-

கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

108 ஆம்புலன்ஸ் சேவை

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு கொடியசைத்து சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அழகேசன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரகலாதன், கன்னியாகுமரி அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெனட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story