பால் உற்பத்தியாளர்களுக்கு 1.21 கோடி போனஸ்


பால் உற்பத்தியாளர்களுக்கு 1.21 கோடி போனஸ்
x

சோளிங்கரில் பால் உற்பத்தியாளர்களுக்கு 1.21 கோடி போனஸ் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

வேலூர் துணைப்பதிவாளர் விஸ்வேஸ்வரன், முதுநிலை ஆய்வாளர் கீதாபாரதி ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் சோளிங்கர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனி, நிர்வாக இயக்குனர் குணசேகரன், லட்சுமி, ராகினி, தசரதன், வடிவேலு, ராணி, செல்வி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு 3,877 பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு கோடியே 21 லட்சத்து 9,109 ரூபாய் போனசாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


Next Story