2 பேர் கைது


2 பேர் கைது
x

செல்போன் பறித்த 2 பேர் கைது

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் பாரதி. இவர் நேற்று முன்தினம் இரவில் பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 27), திசையன்விளை காரியாண்டி பகுதியைச் சேர்ந்த சுடலைமணி (46) ஆகிய 2 பேரும் வாளை காட்டி மிரட்டி பாரதியிடம் செல்போனை பறித்துள்ளனர்.

இதுகுறித்து பாரதி அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, சுடலைமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story