2 கோடியே 17 லட்சம் பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வேண்டும்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு


2 கோடியே 17 லட்சம் பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வேண்டும்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு
x

2 கோடியே 17 லட்சம் பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வேண்டும்; முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேச்சு

ஈரோடு

ஈரோடு பெரியார் நகரில், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பெரியார்நகர் பகுதி செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய அரசின் போக்கால் விலைவாசி உயர்ந்துள்ளது. மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை ரூ.1,000 வழங்கப்படும் என தி.மு.க. தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்குகின்றனர். அந்த தொகை 2 கோடியே 17 லட்சம் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும்.

இந்த ஆட்சியால் பொதுமக்கள் தினம் தினம் சிரமத்தை சந்திக்கின்றனர். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அதில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெல்லும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, பூந்துறை பாலு, ராமசாமி, பகுதி செயலாளர்கள் பழனிசாமி, கேசவமூர்த்தி, முருகுசேகர், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் கவுன்சிலர் கே.எஸ்.கோபால், மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரைசக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story