மாநகராட்சி அதிகாரிகள் 2 பேருக்கு அபராதம்


மாநகராட்சி அதிகாரிகள் 2 பேருக்கு அபராதம்
x

மாநகராட்சி அதிகாரிகள் 2 பேருக்கு அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு கரும்பாட்டூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர், நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் தெரு விளக்குகள் பராமரிப்பு நடைபெறும் பணிக்கு பயன்படுத்தப்படும் கோப்புகளுக்கான நகல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார்.

ஆனால் அதற்கு பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாநில தகவல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம் மனுதாக்கல் செய்தவருக்கு உரிய தகவல் வழங்காத 2 மாநகராட்சி அதிகாரிகளுக்கு மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.


Next Story