மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

நெல்லையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை பகுதியில் நேற்று சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற மாரிமுத்து (வயது 51) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 37 மது பாட்டில்கள், ரூ.110-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தச்சநல்லூர் போலீசார் நயினார்குளம் மார்க்கெட் சாலையில் ரோந்து சென்றபோது அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் (48) என்பவரை கைது செய்து, 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story