மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

பாளையங்கோட்டையில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர பகுதியில் அதிகாலை நேரங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது சீவலப்பேரி ரோட்டில் உள்ள மணிக்கூண்டு அருகே டாஸ்மாக் கடை மற்றும் பாளை. மார்க்கெட் அருகே வண்டிப்பேட்டை தெருவில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை அடைத்திருக்கும் போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று, நாங்குநேரி அருகே கீழ காடுவெட்டியையை சேர்ந்த கல்லத்தியான் (வயது 50), தாழையூத்து தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் (20) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 மதுபாட்டில்கள், ரூ.4,260 பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story