கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு


கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
x

குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

பாலதண்டாயுதபாணி கோவில்

அன்னவாசல் அருகே உள்ள குமரமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தைப்பூசம், கார்த்திகை திருவிழா உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களுக்கு திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

2 வாலிபர்கள் கைது

கடந்த அக்டோபர் மாதம் மர்ம ஆசாமிகள் கோவில் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே சென்று கண்காணிப்பு கேமரா வயர்களை வெட்டினர். அதன் பிறகு கோவில் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை திருடி சென்றனர். மேலும் கோவிலில் மிளகாய் பொடியை தூவி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலில் வைக்கப்பட்ட பணத்தை திருடியதாக கைவேலிப்பட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் காந்தி (வயது 19), பரம்பூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் செல்வக்குமார் (19) ஆகியோரை அன்னவாசல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story