சிறையில் இருந்து காதலனை சூட்கேசில் கடத்திய காதலி கைது


சிறையில் இருந்து காதலனை சூட்கேசில் கடத்திய காதலி கைது
x
தினத்தந்தி 17 Jan 2017 9:14 AM GMT (Updated: 17 Jan 2017 9:14 AM GMT)

வெனிசுலாவில் தனது காதலனை சிறையில் இருந்து சூட்கேஸில் கடத்திய இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வெனிசுலாவில்  இப்ரெயின் ஜோஸ் வர்காஸ் என்பவருக்கு வாகன திருட்டில் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தனது காதலன் இப்ரெயினை பார்ப்பதற்காக 25 வயதான அவரது காதலி அன்டொனிட்டா ரோபல்ஸ் சிறைக்கு சென்றுள்ளார்.

கூடவே 6 வயது நிரம்பிய சிறுமியை அழைத்து வந்த அன்டொனிட்டா, ஒரு சூட்கேசையும் கொண்டு சென்று உள்ளார். இந்நிலையில் அவர் காதலனை பார்த்து விட்டு திரும்பி செல்லும் போது சூட்கேஸை இழுக்க முடியாமல் இழுத்துச் சென்று உள்ளார்

இதனால் சந்தேகமடைந்த போலீசார், சூட்கேசை சோதனையிட்ட போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சூட்கேஸில் அவரது காதலர் உடம்பை வளைத்து ஒளிந்துக் கொண்டிருந்து இருந்ததை கண்டு போலீசாஅ அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து ஜோஸ்  சிறையில் இருந்து தப்ப உதவிய அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story