முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழியும் மார்கண்டேய கட்ஜூ வேதனை


முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழியும் மார்கண்டேய கட்ஜூ வேதனை
x
தினத்தந்தி 16 Feb 2017 5:44 AM GMT (Updated: 16 Feb 2017 6:10 AM GMT)

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்லும் மார்கண்டேய கட்ஜூ வேதனை தெரிவித்து உள்ளார்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என கூறி 4 வருட சிறை தண்டனையும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து நேற்று மாலை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கபட்டனர்.

இந்த நிலையில் தமிழக கவர்னரை  சந்தித்து பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஆட்சியமைக்க கோரிக்கை வைத்தனர்.

 இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க கவர்னர் நேரம்  ஒதுக்கி உள்ளார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-


சசிகலா ஆதரவில் இருக்கும் எம் .எல்.ஏக்கள் பழனிச்சாமியை ஆதரிக்கலாம். தமிழர்கள் முட்டாள்கள் இல்லை.எம்.எல்.ஏக்கள் எங்கே போவார்கள் அல்லது அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்லும் என்றும் தற்போது ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வைத்தால் திமுக பெரும்பான்மையான வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story