மாநில செய்திகள்

திருநாவுக்கரசர் சசிகலா ஆதரவாகவே பேசி வருகிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு + "||" + Elangovan tabloid indictment

திருநாவுக்கரசர் சசிகலா ஆதரவாகவே பேசி வருகிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

திருநாவுக்கரசர் சசிகலா ஆதரவாகவே  பேசி வருகிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  குற்றச்சாட்டு
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அதிமுகவில் திருநாவுக்கரசர் சேருவார் என்றே எனக்கு செய்தி வருகிறது. திருநாவுக்கரசர்  சசிகலா ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார். நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். திமுக எடுக்கும் முடிவையே காங்கிரஸ் எடுக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 

எதிராக வாக்களிப்பது என ராகுல் காந்தி உடனான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்து கூறி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.