ஜெயலலிதா மறைவு குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி வருவது கண்டனத்திற்குரியது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்


ஜெயலலிதா மறைவு குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி வருவது கண்டனத்திற்குரியது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
தினத்தந்தி 2 March 2017 6:10 PM IST (Updated: 2 March 2017 6:09 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மறைவு குறித்து அரசியல் காரணங்களுக்காக உண்மைக்கு புறம்பாக பேசி வருவது கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார் என டிஸ்சார்ஜ் அறிக்கையில் தகவல் இருப்பதாக பி.எச்.பாண்டியன் கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய அரசிடமும், அப்பலோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மருத்துவர்கள் விளக்கம் தந்த பிறகும் குதர்க்கமாக பேசி வருகிறார்கள். உண்மைக்கு புறம்பாக பேசுவது ஜெயலலிதா புகழுக்கு இழுக்காகிவிடும்.

அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா மரணத்தை விமர்சிக்கின்றனர்.  புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? என அமைச்சர் சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.  மரணத்தை விமர்சனத்திற்குள்ளாக்குவது மனிதாபிமானத்திற்கு விரோதமானது. பி.எச்.பாண்டியன்,மனோஜ் பாண்டியனுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story