மாநில செய்திகள்

சசிகலா புஷ்பா ஆபாச படம் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரணை டெல்லி போலீஸ் தீவிரம் + "||" + Sasikala Pushpa alleges AIADMK members put her morphed photos online

சசிகலா புஷ்பா ஆபாச படம் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரணை டெல்லி போலீஸ் தீவிரம்

சசிகலா புஷ்பா ஆபாச படம் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரணை டெல்லி போலீஸ் தீவிரம்
சசிகலா புஷ்பா ஆபாச படம் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை

அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக டெல்லி விமான நிலையத்தில் வைத்து இவர்கள் இருவருக்கும் மோதலும் வெடித்தது.

இதனை தொடர்ந்து அப்போது முதல்-அமைச்சராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா புஷ்பாவை போயஸ் கார்டனுக்கு நேரில் அழைத்து விசாரணை நடத் தினார். எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொல்லி என்னை வற்புறுத்துகின்றனர். போயஸ் கார்டனில் வைத்து என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் பாராளுமன்றத்தில் கதறினார்.
 
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற சசிகலா புஷ்பா, அங்கு வைத்து அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கினார். ஜெயலலிதா மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீடு தாக்கப்பட்டது.

இந்த நிலையில் சசிகலா புஷ்பா கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள மந்திர் கார்க் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் என்னை இழிவுபடுத்தும் எண்ணத்தில் அ.தி.மு.க.வில் எனது வளர்ச்சியை சீர்குலைக்கும் நோக்கத்தில் நானும் எம்.பி. ஒருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களை சிலர் வெளியிட்டு விட்டனர். அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த சசிகலா புஷ்பா, அவர்கள் யார்-யார் என்பது பற்றிய பட்டியலையும் அளித்தார்.

இது தொடர்பாக டெல்லி போலீசார் முன்னாள் பெண் அமைச்சர், எம்.எல்.ஏ. , சசிகலா புஷ்பாவின் முன்னாள் உதவியாளர், சாத்தான்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துறை தலைவர் , உள்ளிட்ட 15 அ.தி.மு.க நிர்வாகிகள்  மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரிடமும் அதிரடியாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.