டெங்கு காய்ச்சல் விவகாரத்தை கவனியுங்கள் தமிழக அரசுக்கு, நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்


டெங்கு காய்ச்சல் விவகாரத்தை கவனியுங்கள் தமிழக அரசுக்கு, நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 July 2017 8:24 PM IST (Updated: 20 July 2017 8:23 PM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் விவகாரத்தை கவனியுங்கள் என்று தமிழக அரசுக்கு, நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக முதல்வர் உட்பட அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது என்றும் ஊழலுக்கான ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதையடுத்து கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அரசின் அனைத்து துறை ஊழல்களையும் மக்கள் மின்னஞ்சலில் அனுப்புமாறு  அதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டு இருந்தார். மேலும், நான் ஏற்கனவே அரசியலில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். 

கமல்ஹாசனின் கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு பதிவை இட்டுள்ளார். கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: - “ பள்ளிப் படிப்பை முடிக்காதவன் நீட்" ன்கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். என் மகளுக்கு வந்தது.அதை கவனி அரசே! உமை யாம் கவனிப்போம்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story