மாநில செய்திகள்

தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிர் இழப்பு மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை + "||" + In TamilNadu Dengue so far 18 people lost their lives Central Government Tamilnadu Government Report

தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிர் இழப்பு மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை

தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிர் இழப்பு மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிர் இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அனுப்பி உள்ளது.
சென்னை

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து தமிழக அரசு  மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. 2017 அக்டோபர் 12 ந்தேதி வரை டெங்கு உயிரிழப்புகள்  குறித்து அதில் கூறிப்பட்டு உள்ளது. 

அதில் கூறப்பட்டு உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 12,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் அதிகபட்சமாக 1178 பேருக்கு டெங்கு பாதிப்பு

* டெங்கு காய்ச்சலால் சென்னை-1,138 பேர், சங்கரன்கோவில்-1,072 பேர் பாதிப்பு.  தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு  ஏற்பட்டு உள்ளது.

* தூத்துக்குடி, சங்கரன் கோவில், சென்னை, திருச்சி  ஆகிய இடங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

* டெங்கு காய்ச்சலால் கோவை-942 பேர், திருப்பூர்-782 பேர், கன்னியாகுமரி-777 பேர் பாதிப்பு.