அடுத்தக்கட்ட விசாரணையை எப்படி மேற்கொள்வது? வருமான வரி அதிகாரிகள் ஆலோசனை
வருமான வரி சோதனையின் போது போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ், லேப்டாப்களில் பல முக்கிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
வருமான வரி சோதனையின் போது போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ், லேப்டாப்களில் பல முக்கிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு மேல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனைக்கூட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. ஆலோசனையில், உயர் அதிகாரிகள், வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை எப்படி மேற்கொள்வது? என்பது குறித்து விளக்கியதாகவும், சிறையில் உள்ள சசிகலாவிடம் எப்போது விசாரணை செய்வது? அவரிடம் எந்த மாதிரியான விசாரணையை மேற்கொள்ளலாம்? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது
Related Tags :
Next Story