மாநில செய்திகள்

வைரமுத்துவை கண்டித்து ஜீயர் உண்ணாவிரதம் + "||" + Zeyar fast for denying Vairamuthu

வைரமுத்துவை கண்டித்து ஜீயர் உண்ணாவிரதம்

வைரமுத்துவை கண்டித்து ஜீயர் உண்ணாவிரதம்
ஆண்டாள்கோவிலில் உள்ள மணவாளமாமுனிகள் மடத்தின் 24–வது பட்டம் ஸ்ரீசடகோப ராமானுஜர்ஜீயர் சுவாமிகள் மடத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஆண்டாளை அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்துவை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவிலில் உள்ள மணவாளமாமுனிகள் மடத்தின் 24–வது பட்டம் ஸ்ரீசடகோப ராமானுஜர்ஜீயர் சுவாமிகள் மடத்தில் உண்ணாவிரதம் இருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். மாலையில் உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளப்பட்டது.

வைரமுத்துவை கண்டித்து வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்து வந்த நாட்டுப்புற கலைஞரான விஜயலட்சுமியும், அவருடைய கணவர் நவநீத கிருஷ்ணனும் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஜீயரின் முன்னிலையில் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்கள்.

கவிஞர் வைரமுத்துவை கண்டித்து துபாயிலுள்ள பிராமணர் சங்க தலைவரான தொழிலதிபர் ஸ்ரீநாத், விழுப்பனூர் பிராமணர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.