முன்னாள் எம்.பி. குமாரசாமி உள்பட அ.தி.மு.க.வில் இருந்து 175 பேர் நீக்கம்


முன்னாள் எம்.பி. குமாரசாமி உள்பட அ.தி.மு.க.வில் இருந்து 175 பேர் நீக்கம்
x
தினத்தந்தி 2 Feb 2018 8:30 PM GMT (Updated: 2 Feb 2018 8:02 PM GMT)

முன்னாள் எம்.பி. குமாரசாமி உள்பட 175 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

சென்னை, 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. குமாரசாமி உள்பட 175 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story