சர்வதேச பொருளாதார தடையையும் மீறி வடகொரியா 200 மில்லியன் டாலர் வருவாய்


சர்வதேச பொருளாதார தடையையும் மீறி வடகொரியா  200 மில்லியன் டாலர் வருவாய்
x
தினத்தந்தி 3 Feb 2018 11:31 AM GMT (Updated: 3 Feb 2018 11:31 AM GMT)

ஐநா சர்வதேச பொருளாதார தடையையும் மீறி வடகொரியா 200 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை செய்து வந்ததால் கடந்த ஆண்டு வடகொரியா மீது ஐ நா சபையில் அமெரிக்கா பொருளாதார தடையை கொண்டுவந்தது.

இதன் மூலம் வடகொரியாவின் பொருட்களை எந்த நாடும் இறக்குமதி செய்ய கூடாது என்ற தீர்மானத்தை அனைத்து நாடுகளும் ஏற்க வேண்டும் என்பது சட்டம். தடையை மீறி வடகொரியாவிடம் இருந்து இறக்குமதி செய்த நாடுகள்ஆனால் இந்த சட்டங்களை எல்லாம் மதிக்காமல் வட கொரிய அதிபர் கிம் ஜாங் சீனா, மலேசியா, ரஷ்யா, மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக அளவு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் மற்ற நாடுகளை விட சீனா அதிக அளவு பல்வேறு விதமான பொருட்களை வட கொரியாவுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் கப்பல் மூலம் செய்துள்ளது. 

ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள சிரியா மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம் பிரச்சனை உள்ள மியான்மர் போன்ற நாடுகளுக்கு வடகொரியா ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.  வட கொரியாவை வழிக்கு கொண்டு வர ஒரு நாட்டிற்கு அத்தியாவசிய தேவைகளான எரிசக்தி, உணவு பொருள், பணம் போன்றவற்றை முடக்க கடுமையான தடைகளை அமெரிக்கா வட கொரியா மீது விதித்துள்ளது. ஆனால் காலகாலமாக கப்பல் போக்குவரத்தில் பல ஏமாற்று தந்திரங்களை திறம்பட வட கொரியா கையாள்வதால் 

அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஈடுபடுவதை அமெரிக்கா ஒப்பு கொண்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட ஒரு ஜப்பானிய உளவு விமானம், டொமினிகன் குடியரசு கடற்பரப்பில் வட கொரியா கப்பல் விட்டு கப்பல்- மூலம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் கூறும் போது, வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை முழுதும் அமுல்படுத்த பல சிக்கல் இருப்பதால் அதில் அமெரிக்க இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தும் என்றார்”.ஐ.நா தடைகளை மதிக்காமல் கப்பல் மூலம் வடகொரியாவிடம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் மற்ற நாடுகளை விரைவில் கட்டுப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story