மாநில செய்திகள்

டி.டி.வி.தினகரன் மூளைச்சலவை செய்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு + "||" + Dinakaran is brainwashed by Minister RP Uthayakumar

டி.டி.வி.தினகரன் மூளைச்சலவை செய்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

டி.டி.வி.தினகரன் மூளைச்சலவை செய்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை டி.டி.வி.தினகரன் மூளைச்சலவை செய்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.#Admk #TTVDhinakaran
சென்னை,

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்தது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-


எங்களிடம் பிரிந்து சென்றவர் (டி.டி.வி. தினகரன்) மூளைச்சலவை செய்துகொண்டே இருக்கிறார். அதில் யாரும் சிக்கவில்லை. அந்த மூளைச்சலவையில் சிக்கியவர்கள் உண்மை தெரிந்தவுடன் மீண்டும் எங்களுடன் வந்துவிடுவார்கள். பிரபுவும் வந்துவிடுவார்.

பிரபு அவருடைய தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்- அமைச்சர் நிறைவேற்றி தந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு திடீரென்று ஆதரவு அளித்துள்ளாரே?

பதில்:- என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக விசாரித்த பின்னர், அதற்கான தகவலை நிச்சயம் அளிப்பேன்.

கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவு ஸ்லீப்பர்செல்கள் வெளியேற தொடங்கி விட்டார்களா?

பதில்:- எங்கள் தரப்பில் யாரும் ‘ஸ்லீப்பர்செல்ஸ்’ இல்லை. அவர்களிடம் தான் அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறோம்.

சட்டமன்றத்தில் பெரும்பான்மை

கேள்வி:- சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பது கேள்விக்குறியாகுமா?

பதில்:- பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. அறுதி பெரும்பான்மையுடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.