குரங்கணி காட்டுத்தீ மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கைது


குரங்கணி காட்டுத்தீ மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் கைது
x
தினத்தந்தி 12 March 2018 9:16 AM GMT (Updated: 12 March 2018 9:16 AM GMT)

குரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷை போலீஸ் கைது செய்தது. #KuranganiForestFire

தேனி,

போடி அருகே குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே "மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்கவில்லை, உரிய அனுமதி பெற்ற பிறகே சென்றிருக்க வேண்டும்" என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிஉள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், அழைத்துச் சென்றவர்கள் என விசாரணை விரிவடைகிறது.

குரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷை போலீஸ் கைது செய்து உள்ளது.

Next Story