மாநில செய்திகள்

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார் + "||" + Meeting of South Zone Coordinators Kamal Hassan spoke with the party

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார்

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார்
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்: கட்சியினருடன் கமல்ஹாசன் உரையாடினார் கட்சியில் பெண்களை அதிக அளவில் சேர்க்க அறிவுரை வழங்கினார்.
சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. இதில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியினருடன் கலந்துரையாடினார். அப்போது கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

இதையடுத்து கட்சியினர் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது.

அரசியலில் ஈடுபடுவதற்கு பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. நமது கட்சியில் இணைய அதிக அளவில் பெண்கள் விரும்புகிறார்கள். எனவே பெண்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மய்யம் விசில் செயலி கட்சிக்கு உதவுவதோடு, தமிழகத்தை சீர்த்திருத்தம் செய்யவும் பயன்படும். கடந்த சில ஆண்டுகளாக சரிவர நடைபெறாத கிராம சபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. கட்சியினர், அமைச்சர்களை மரியாதையுடன் குறிப்பிட வேண்டும். இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.