மாநில செய்திகள்

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவாகரன் பயன்படுத்தக்கூடாது - சசிகலா நோட்டீஸ் + "||" + Don t Use My Photos and Name Sasikala notice to Divakara

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவாகரன் பயன்படுத்தக்கூடாது - சசிகலா நோட்டீஸ்

எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவாகரன் பயன்படுத்தக்கூடாது - சசிகலா நோட்டீஸ்
எனது பெயரையோ, புகைப்படத்தையோ திவாகரன் பயன்படுத்தக்கூடாது என சசிகலா நோட்டீஸ் விடுத்து உள்ளார். #Dhivakaran #Sasikala #TTVDhinakaran
சென்னை,

திவாகரன் தனது சொந்த அரசியல் செயல்பாட்டிற்கு, சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நோட்டீஸ் விடுத்து உள்ளார். உடன்பிறந்த சகோதரி என திவாகரன் ஊடங்களில் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

சசிகலாவை பற்றி உண்மைக்கு மாறாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும், தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திவாகரன் யாரையோ திருப்திப்படுத்த, தினகரன் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறார். துரோகிகளிடம் கூட்டு வைத்துள்ள திவாகரனை தமிழகம் மன்னிக்காது, உடன்பிறந்த சகோதரி என உரிமை கோருவதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்றது உண்மைதான்: விசாரணைக்குழு அறிக்கையில் தகவல்
சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்றது உண்மைதான் என்று விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்
அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
3. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர்.