காவிரி மேலாண்மை வாரியம்:தமிழகத்துக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஆர்.சரத்குமார் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம்:தமிழகத்துக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஆர்.சரத்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 May 2018 8:31 PM GMT (Updated: 13 May 2018 8:31 PM GMT)

இன்று காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இனியும் காலந்தாழ்த்தாமல் வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்திடுவோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சென்னை, 

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இனியும் காலந்தாழ்த்தாமல் வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்திடுவோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற சொல்லும், காவிரி மேலாண்மை வாரியமும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து தமிழகத்திற்கு சாதகமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்த வேண்டும்.தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு வரும் என நம்புகிறேன். கர்நாடக தேர்தலை காரணங்காட்டி காலநீட்டிப்பு செய்த மத்திய அரசு, கர்நாடக தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் எதிர்காலம் குறித்த கேள்விக் குறிகளோடு, வாழ்வாதாரத்திற்காகப் போராடும் லட்சக்கணக்கான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நியாயமான முறையில் நிரந்தரத்தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story