மாநில செய்திகள்

மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு மழை பெய்யும்வானிலை மைய அதிகாரி பேட்டி + "||" + Weather Forecast Officer Interview

மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு மழை பெய்யும்வானிலை மைய அதிகாரி பேட்டி

மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு மழை பெய்யும்வானிலை மைய அதிகாரி பேட்டி
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
சென்னை, 

சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தெற்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி ஆந்திராவில் உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. விரிஞ்சிபுரம், கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., அரிமளம், செய்யாறு, காஞ்சீபுரத்தில் 6 செ.மீ., ஆலங்குடி, செம்பரம்பாக்கத்தில் தலா 5 செ.மீ., சென்னை, அரியலூர், வந்தவாசி, தேவக்கோட்டை, நிலக்கோட்டை, சென்னை விமானநிலையம், டி.ஜி.பி. அலுவலகம், திருப்பத்தூர், குமாரபாளையம், திருவாலங்காடு, கடலூர், செய்யூர், காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

வருகிற 11-ந்தேதி வரை தமிழகத்தின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.