நடிகர்களின் அரசியலை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்


நடிகர்களின் அரசியலை  மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் - அமைச்சர்  ஜெயக்குமார்
x

நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #Rajinikanth

சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

நடிகர்களின் அரசியலை படத்தின் வெற்றி மூலம் தீர்மானிக்க முடியாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

உலகின் முதல் உயிரினம் கடலில் தான் தோன்றியது; உயிரினங்கள் தோன்றிய கடலை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்.  கடல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலின் அவசியம், அதை பாதுகாப்பது குறித்த கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று பொம்மைகள் தினம்-வெறும் பொம்மைகளாக இருக்காமல் சமூகத்திற்கான படைப்பாளியாக இருக்க வேண்டும் என அவர் வாழ்த்து செய்தி கூறியுள்ளார். 

Next Story