மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை தமிழக அரசு உத்தரவு + "||" + For remunerative employees Offer Tamil Nadu Government Order

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை
தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியில் இருந்து 15 நிமிடங்களுக்கு முன்பு வீட்டுக்கு புறப்பட்டு செல்ல தமிழக அரசு சலுகை அளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
சென்னை,

அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் மாலை 5.45 மணிக்கு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணம் செய்து வீட்டுக்கு செல்ல சிரமமாக உள்ளது. எனவே மாலையில் முன்னதாக அலுவலகம் விட்டு வீடு செல்ல அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.


இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் குறிப்புரை கேட்ட போது, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாகச் வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தார்.

மாற்றுத்திறனாளிகளுக் கான ஆணையரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறித்து தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் பின்னர் வெளியிடப்படும். இதுதொடர்பாக உத்தரவு நகல்கள் தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், ஐகோர்ட்டு பதிவாளர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்; மாணவன் கைது
பென்னாகரம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
3. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியினர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
அரசு பள்ளிகளில் 1 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
5. மாற்றுத்திறனாளி மகனை கொன்ற வழக்கில் தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் - திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
மாற்றுத்திறனாளி மகனை அடித்துக்கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.