எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது - ஸ்டாலின்


எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது - ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 July 2018 6:40 AM GMT (Updated: 2018-07-02T12:10:29+05:30)

எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

தஞ்சை,

தஞ்சாவூரில் திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்ல திருமண விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

எப்போதுமே இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  8 வழிச்சாலை திட்டத்தை அரசியலாக்கவில்லை. பொது மக்களிடம் கருத்து கேட்ட பிறகு திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று தான் சொல்கிறோம். என கூறினார். 

அதனை தொடர்ந்து இந்த திருமண விழாவில் ஸ்டாலினும், சசிகலாவின் உறவினர் திவாகரனும் சந்தித்து, நலம் விசாரித்துக் கொண்டனர்.

Next Story