அமித்ஷா தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை அமைச்சர் ஜெயக்குமார் சமாளிப்பு


அமித்ஷா தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை அமைச்சர் ஜெயக்குமார் சமாளிப்பு
x
தினத்தந்தி 10 July 2018 8:22 AM GMT (Updated: 10 July 2018 8:22 AM GMT)

தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, எச்.ராஜா தான் தவறாக மொழி மாற்றம் செய்து இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #AmitShah #Jayakumar

சென்னை

தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவது குறித்து  தேசிய தலைவர் அமித்ஷா தமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசும் போது  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான்  அதிகம் ஊழல் நடக்கிறது எனக் கூறினார்

அமித்ஷாவின் ஊழல் பேச்சு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது;-

தமிழ்நாட்டில் பா.ஜனதாவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அது அவர்களுடைய கட்சியின் விருப்பம். அதில் தவறில்லை. அ.தி.மு.க.வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்துவது போல பா.ஜ.க.வும் நடத்தியுள்ளது.

அந்த கூட்டத்தில் அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் (மைக்ரோ இர்ரிகே‌ஷன்) என்று பேசினார். அதனை எச்.ராஜா “சிறுநீர் பாசனம்” என்று தவறுதலாக மொழி பெயர்த்துள்ளார்.

அதுபோல அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார். தமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மொழி மாற்றம் செய்து  இருக்கிறார்., தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசினார் .

மீன்களில் ரசாயனம் பூசப்படுவதாக சமூக விரோதிகள் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்  இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Next Story