சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் திடீர் தீ விபத்து


சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 13 July 2018 9:00 PM GMT (Updated: 13 July 2018 7:34 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

அடையாறு

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதனின் வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்து உள்ளது. நேற்று காலை அவருடைய வீட்டில் திடீரென கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து தகவலின் பேரில் நீதிபதியின் வீட்டுக்கு விரைந்த தேனாம்பேட்டை தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் நீதிபதியின் வீட்டில் தீயை அணைத்து விட்டு தீயணைப்பு வாகனம் தேனாம்பேட்டை திரும்பியபோது, மயிலாப்பூர் டி.டி.கே சாலையில் உள்ள ஆக்ஸ் அண்ட் டொமேடோஸ் என்ற ஓட்டலில் இருந்து கரும்புகை வந்தது.

இதைக்கண்ட தீயணைப்பு படையினர், தாமதிக்காமல் ஓட்டலில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை அகற்றி, அங்கு பரவிய தீயை உடனடியாக அணைத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்த்தனர்.

ஓட்டலில் தரப்பில் இருந்து எந்த புகாரும் வராத நிலையிலும், செல்லும் வழியில் கட்டிடத்தில் வந்த கரும்புகை வருவதை கண்ட தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்ததை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story