பிற்படுத்தப்பட்ட சமுதாய அர்ச்சகர் நியமனம்: மு.க.ஸ்டாலினை சந்தித்து கி.வீரமணி வாழ்த்து


பிற்படுத்தப்பட்ட சமுதாய அர்ச்சகர் நியமனம்: மு.க.ஸ்டாலினை சந்தித்து கி.வீரமணி வாழ்த்து
x
தினத்தந்தி 1 Aug 2018 8:41 PM GMT (Updated: 2018-08-02T02:11:52+05:30)

காவேரி ஆஸ்பத்திரியில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நேரில் சந்தித்தார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவேரி ஆஸ்பத்திரியில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நேரில் சந்தித்தார். கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தினால் மதுரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறி வாழ்த்து தெரிவித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இந்த ஆண்டிற்கான ‘ராஜீவ்காந்தி சத்பாவனா’ விருதைப் பெறும் முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்திக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் உறுதிப்படுத்துவதற்கு இதுபோன்ற வலிமையான குரல்கள் அவசியம் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story