திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும் -மா.பா.பாண்டிய ராஜன்


திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும் -மா.பா.பாண்டிய ராஜன்
x
தினத்தந்தி 3 Aug 2018 6:50 AM GMT (Updated: 3 Aug 2018 6:50 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் கூறினார்.

சென்னை

ஆரணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் குழுவினர், தமிழக அரசுக்கு கடந்த ஓராண்டாக எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், தமிழக அரசு தாமாக முன் வந்து, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசியல் நோக்கம் இல்லை. ஒளிவு மறைவு இல்லாத தெளிவான விசாரணை தேவைப்படுகிறது.

சிலை கடத்தல் வழக்கில் வேகமாக செயல்படுவதுடன் நிறைய சிலைகளை மீட்பதற்காகவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசும் தனது நிலையை கோர்ட்டில் தெரிவித்துள்ளது. எந்த ஒரு மாநில அரசும் தாமாக வந்து சி.பி.ஐ. வசம் வழக்குகளை ஒப்படைத்ததில்லை. மாறாக தமிழக அரசு சி.பி.ஐ.யிடம் சிலை கடத்தல் வழக்குகளை ஒப்படைத்திருப்பது, இயற்கையாக நிகழ்ந்தவை. இதில் உள்நோக்கம் கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 

அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது;-

சிலைக் கடத்தல் வழக்கில் வெளிநாட்டினருக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது . ஒரு அதிகாரி நன்றாக செயல்படுகிறார் என்பதாலேயே, சர்வதேச அளவிலான வழக்கை அவரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.

Next Story