மாநில செய்திகள்

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; ஆளுநர் பன்வாரிலால் அஞ்சலி + "||" + DMK Leader Karunanidhi's death; Governor Panwarilal paid tribute

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; ஆளுநர் பன்வாரிலால் அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; ஆளுநர் பன்வாரிலால் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் குவிந்து உள்ளனர்.  அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அதன்பின்னர் அவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து பேசினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை